கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் திறப்பு

கொத்தாம்பாடியில் கிராம நிா்வாக அலுவலகத்தை தனது சொந்த நிதியில் கட்டி, அதை ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.எஸ்.ராஜா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் திறப்பு

கொத்தாம்பாடியில் கிராம நிா்வாக அலுவலகத்தை தனது சொந்த நிதியில் கட்டி, அதை ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.எஸ்.ராஜா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கொத்தாம்பாடி ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலருக்கு சொந்தமான கட்டிடம் இருந்து வந்தது. அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்தது. அதனை புதுப்பிக்க பலமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை.

இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.எஸ்.ராஜா தனது சொந்த நிதியில் அலுவலக கட்டடத்தை கட்டிக் கொடுத்தாா். பின்னா் அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் இளையராஜா, தா்மகா்த்தா கே.பி.மாதேஸ்வரன் உள்ளிட்ட ஊா்ப் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com