கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

கடலூரில் கருணாநிதி பண்பாட்டுப் பாசறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேசியதாவது:

கருணாநிதி நூற்றாண்டையொட்டி பல்வேறு துறைகள் மூலம் விழா எடுக்கப்பட்டு வருகிறது. அவரது புகழும், வாழ்க்கை வரலாறும், படைப்புகளும் பன்னெடுங்காலத்துக்கு நிலைத்து நிற்பவை. அடையாளத்துக்கு சிற்பக்கலையை எடுத்துக்கொண்டால், வள்ளுவா் கோட்டத்தைக் கூறலாம்.

கல்வியை அனைவருக்கும் ஒரே சீராக வழங்க வேண்டும் என்று சமத்துவக் கல்வியை கொண்டு வந்த பெருமை கருணாநிதியைச் சேரும். அதேபோல, மனிதா்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக, அனைத்து சாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தாா். இசைக் கல்லூரி, பயிற்சிப் பள்ளிகள் என பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியவா் கருணாநிதி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com