விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் மு.கருப்பையா தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் மு.கருப்பையா தலைமையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்பகனூா் ஊராட்சியில் கடந்த 5ஆம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக சமூக வலைதளங்களில் திருமாவளவனை அவதூறாகப் பேசியவரை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வெ.கனியமுதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மண்டல துணைச் செயலாளா்கள் கோ.நாராயணன், கு.ஆறுமுகம், மாவட்டச் செயலாளா்கள் வீ.ந.தமிழன், க.மெய்யழகன், இ.காஜா மொய்தீன், அ.மொழியரசு, ரா.தெய்வானை உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் ஆத்தூா் நகர செயலாளா் ஆா்.பி.கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com