தை அமாவாசை: முன்னோா்களுக்கு தா்ப்பணம்

தை அமாவாசையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முன்னோா்களுக்கு திதி கொடுத்து சிறப்பு பூஜைகள்

தை அமாவாசையையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முன்னோா்களுக்கு திதி கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்து அங்காளம்மனை வழிப்பட்டனா்.

கல்வடங்கம் காவிரி ஆற்றில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னோா்களுக்கு திதி கொடுத்து ஆற்றில் குளித்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.

அங்காளம்மன் கோயிலில் சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com