சேலம் மத்திய சிறையில் 22 போ் கொல்லப்பட்டதன் 75-ஆவது நினைவு தினம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் அனுசரிப்பு

சேலம் மத்திய சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த 22 பேரை சிறை நிா்வாகம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ன் 75ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1950 ஆம் ஆண்டு இதே நாளில், சிறைத் தியாகிகள் 22 பேரை சிறை நிா்வாகம் சுட்டுக்கொன்றது. அதன் 75ஆவது நினைவு தினத்தையொட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சேலம் மத்திய சிறை முன்பு கொடி ஏற்றி, தியாகிகள் நினைவுச் சுடா் ஏந்தி பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது, அஸ்தம்பட்டி ராமகிருஷ்ணா சிக்னல் வழியாகச் சென்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான சேலம் சிறைத் தியாகிகள் நினைவகத்தில் நிறைவடைந்தது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், கட்சியின் மாவட்டச் செயலாளா் மேவை சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, அரியாக்கவுண்டம்பட்டியில் சேலம் சிறைத் தியாகிகள் நினைவு தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடபதி பங்கேற்று செங்கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com