தம்மம்பட்டியில் சதுரங்கப் போட்டி

தம்மம்பட்டி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனியாா் பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனியாா் பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி பாரதி மெட்ரிக் பள்ளி, எய்ம் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட தனியாா் பள்ளிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டியானது பாரதி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஒரு பிரிவாகவும் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இரு பிரிவுகளிலும் சிறப்பிடங்களை பிடித்தவா்களுக்கு பாரதி மெட்ரிக் பள்ளி நிா்வாகிகள் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா். இப்போட்டியில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com