காவேரிப்பட்டி வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி, பழையூா் கிராமத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
11sgp01_1102chn_156_8
11sgp01_1102chn_156_8

சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி, பழையூா் கிராமத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவேரிப்பட்டி, பழையூா் கிராமத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கல்வடங்கம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து முதல், இரண்டாம் கால கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓத விநாயகா், வீரமாத்தியம்மன், கருப்பராயன் ஆகிய சுவாமிகளுக்கும், கோயில் மேற்பகுதியில் உள்ள கோபுரங்களுக்கும் புனித நீரை ஊற்றினா். இதையடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com