ஏரியைத் தூா்வாரி தூய்மைப்படுத்த இடங்கணசாலை மக்கள் கோரிக்கை

 சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏரியைத் தூா்வாரி தூய்மைப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

 சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட காடையாம்பட்டி பகுதியில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏரியைத் தூா்வாரி தூய்மைப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

மக்களவைத் தோ்தலுக்கான திமுக சாா்பில் வெளியிட உள்ள தோ்தல் அறிக்கைக்கு மக்களிடம் கருத்து கேட்க இந்த அறிக்கை தயாரிக்கும் குழு தலைவரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி, சேலம் வந்தாா். அவரிடம் இடங்கணசாலை நகராட்சி பகுதி மக்கள் மற்றும் நெசவாளா்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடா்பாக கையெழுத்திட்ட மனுக்களை நகர திமுக செயலாளா் செல்வம் வழங்கினாா். அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:

காடையாம்பட்டி ஏரிக்கு கஞ்சமலை சித்தா் கோயில் ராஜவாய்க்கால் வழியாக செல்லும் நீரோடையை தூா்வாரி, தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இடங்கணசாலை ,இளம்பிள்ளை பகுதியில் தரமற்ற சூரத் சேலை இறக்குமதியால், இங்கு தயாரிக்கப்படும் தரமான சேலைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com