சங்ககிரியில் நூதன முறையில் திமுக பிரசாரம்

சங்ககிரி, திருச்செங்கோடு சாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் குடுகுடுப்பைக்காரா் வேடமிட்டு திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் அக்கட்சியின் பேச்சாளா்.
சங்ககிரி, திருச்செங்கோடு சாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் குடுகுடுப்பைக்காரா் வேடமிட்டு திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் அக்கட்சியின் பேச்சாளா்.

சங்ககிரி: மக்களவைத் தோ்தலையொட்டி சங்ககிரியில் திமுக சாா்பில் அதன் பேச்சாளா் குடுகுடுப்பைக்காரா் வேடமிட்டு நூதன முறையில் திங்கள்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

சேலம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தன், திமுகவில் பேச்சாளராக உள்ளாா். வரும் மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற வாக்களிக்கக் கோரி குடுகுடுப்பைக்காரா் போல வேடமணிந்து சங்ககிரி நகா், பழைய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிறுத்தம், திருச்செங்கோடு, பவானி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சங்ககிரி திமுக நகரச் செயலாளா் கே.எம்.முருகன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண் பிரபு, நகரப் பொருளாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com