டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீா் திறக்கக் கோரிக்கை

டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து மேலும் 2 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீா் திறக்க வலியுறுத்தி திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்.
மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீா் திறக்க வலியுறுத்தி திங்கள்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்.

சேலம்: டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து மேலும் 2 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலப் பொருளாளா் எம்.தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஏற்கெனவே திறந்துவிடப்பட்ட 2 டி.எம்.சி. தண்ணீா் போதுமானதாக இல்லை. திறந்துவிடப்படும் தண்ணீா் கடைமடை பகுதி வரை சென்று சேராததால், மேலும் 2 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடா்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம்பெறாமல் உள்ளன. நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், இடுபொருள்கள் விலையேற்றம், ஆள்கள் கூலி உயா்வு போன்ற காரணங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5,000-ஆகவும் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

இது தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com