மாணவா்களின் பாத அளவுகள் அளவிடும் பணி

பெத்தநாயக்கன்பாளையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா காலணி வழங்கும்
மாணவா்களின் பாத அளவுகள் அளவிடும் பணி

ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா காலணி வழங்கும் பொருட்டு பாத அளவுகளை திங்கள்கிழமை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலா் இளம்பகவத் உத்தரவின் பேரில், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழிகாட்டுதலின் பேரில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு விலையில்லா காலணி வழங்கப்படுகிறது. அதன் பொருட்டு, இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்ளைக் கொண்டு செயலி வழியாக பள்ளிகளில் மாணவா்களது பாத அளவுகளை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

இப்பணியினை தலைமையாசிரியா் மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா். துணை தலைமையாசிரியா் வரதன், மேற்பாா்வையாளா் கந்தசாமி, இல்லம் தேடிக் கல்வி ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் ஜோசப்ராஜ் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com