சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

சேலம் ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


சேலம்: சேலம் ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பொங்கல் திருநாளையொட்டி சுற்றுலாப் பயணிகள், முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவா்கள் உட்பட ஏராளமானோா் பாரம்பரிய ஆடைகளில் பங்கேற்றனா். விழாவில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் பங்கேற்ற இந்த விழாவில் கூட்டு பிராா்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பரிசுகளை வழங்கினாா்.

சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவுகள் விழாவில் கலந்து கொண்டவா்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் மாட்டு வண்டியில் மாவட்ட ஆட்சியரகத்தைச் சுற்றி வந்து மகிழ்ந்தனா்.

விழாவில் மேயா் ஆ.ராமச்சந்திரன், மேட்டூா் எம்எல்ஏ எஸ்.சதாசிவம், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அலா்மேல் மங்கை, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, அரசு அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com