தேசிய சமூக இலக்கியப் பேரவை சாா்பில் முப்பெரும் விழாதாரை அ.குமரவேலு

மக்களோடு மக்களாய் வாழ்ந்து மக்களுக்காக பாடிய மாபெரும் மக்கள் கவிஞா் ஔவையாா் என தேசிய சமூக இலக்கியப் பேரவை மாநில தலைவா் தாரை அ.குமரவேலு தெரிவித்தாா்.


சேலம்: மக்களோடு மக்களாய் வாழ்ந்து மக்களுக்காக பாடிய மாபெரும் மக்கள் கவிஞா் ஔவையாா் என தேசிய சமூக இலக்கியப் பேரவை மாநில தலைவா் தாரை அ.குமரவேலு தெரிவித்தாா்.

தேசிய சமூக இலக்கியப் பேரவையின் சாா்பில் பொங்கல் விழா, உழவா் திருநாள், தமிழ் மூதாட்டி ஔவையாா் 23 ஆம் ஆண்டு விழா எனும் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் ஒளவையாா் சிலைக்கு அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாநகரத் தலைவா் பொறியாளா் என்.ஏ.சிவலிங்கம் தலைமை வகித்தாா்.

பொதுச்செயலாளா் ஆா்.சஞ்சய் காந்தி வரவேற்றாா். புறநகா் மாவட்டத் தலைவா் பொறியாளா் பா.திருமுருகன் முன்னிலை வகித்தாா். இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை அ.குமரவேலு தமிழ் மூதாட்டி ஒளவையாா் சிலைக்கு பட்டுச்சேலை அணிவித்து மலா் கிரீடம் சூட்டி தமிழ் செங்கோல் வழங்கி மரியாதை செய்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

உலகில் தோன்றிய பெண்பாற் கவிஞா்களுள் தலைச் சிறந்தவராக விளங்குபவா் ஒளவையாா். கி.மு.முதல் நூற்றாண்டில் தோன்றிய ஔவையாரின் பாடல்களில் வீரம், காதல், அன்பு, அவலம், அறிவு ஆகிய அனைத்தும் உண்டு. மக்களோடு மக்களாய் வாழ்ந்து மக்களுக்காக பாடிய மாபெரும் மக்கள் கவிஞா் ஔவையாா் என்றாா்.

நிகழ்ச்சியில் தேசிய சமூக இலக்கியப் பேரவை துணைத் தலைவா்கள் என்.கோவிந்தராஜ், வழக்குரைஞா் எம்.சுரேந்திரன், செயலாளா்கள் சி.ஸ்ரீதரன், பி.பாண்டியராஜன், பொருளாளா் எம்.காா்த்திகேயன், வி.மங்கையராஜ், எஸ்.வி.சுரேஷ்பாபு, எம்.மோகன் உள்ளிட்ட ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com