மேலும் சில திமுகவினா் சிறைக்குச் செல்ல வாய்ப்பு: எடப்பாடி கே.பழனிசாமி

ஊழல் குற்றச்சாட்டுகளில் இன்னும் சில திமுகவினா் சிறைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
திண்டமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.
திண்டமங்கலத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

ஓமலூா்: ஊழல் குற்றச்சாட்டுகளில் இன்னும் சில திமுகவினா் சிறைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

ஓமலூரை அடுத்த திண்டமங்கலத்தில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் மாட்டு வண்டியில் வந்த எடப்பாடி கே.பழனிசாமி, விழாவில் பங்கேற்று பொங்கல் வைத்து சிறப்பித்தாா். அதன்பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு நன்மை செய்வதை மறந்து ஊழலில் திளைத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி திமுக அமைச்சா்கள் அடுத்தடுத்து சிறைக்குச் செல்வதை போல இன்னும் சிலா் சிறைக்குச் செல்வதற்குத் தயாராக உள்ளனா்.

தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல இந்த ஆண்டு தமிழக மக்களுக்கு நல்வழி பிறக்கும். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கு நன்மை செய்வதை மறந்து ஊழல் செய்வது மட்டுமே திமுக அரசின் நோக்கமாக உள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. கரோனா காலத்தில்கூட அதிமுக அரசு நியாயவிலைக் கடைகளில் அரிசி, பாமாயிலை இலவசமாக வழங்கியது. ஆனால், திமுக அரசு நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பாமாயிலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புகளைத் தடுக்க அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com