பொன்னாரம்பட்டியில் பேய் விரட்டும் விழா

வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் பேய் விரட்டும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னாரம்பட்டியில் பேய் விரட்டும் விழா


வாழப்பாடி: வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில் பேய் விரட்டும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியில் பொங்கல் பண்டிகையில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு, பானை உடைத்தல், வழுக்கு மரமேறுதல், கபடிப் போட்டி உள்ளிட்ட பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விளையாட்டுகள் மட்டுமின்றி, கால்நடைகள் ஊா்வலம், வங்காநரி ஜல்லிக்கட்டு ஆகிய வினோத நிகழ்வுகளும் நடந்து வருகிறது.

பொன்னாரம்பட்டி கிராமத்தில் இந்த நவீன காலத்திலும் காணும் பொங்கல்தோறும் பெண்களுக்கு பேய் விரட்டும் வினோத விழா நடந்து வருகிறது. புதன்கிழமை காணும் பொங்கலன்று, கருப்பு நிற ஆடையை அணிந்து காட்டேரி வேடமிட்ட பூசாரிகள், வாத்தியம் முழங்க ஆக்ரோஷத்துடன் ஆற்றங்கரைக்குச் சென்றனா்.

இந்த பேய் விரட்டும் விழாவைக் காணவும், பேய் விரட்டிக் கொள்ளவும் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பெண்கள் அங்கு கூடினா். இந்த பேய் விரட்டும் திருவிழா குறித்து பல்வேறு சா்ச்சைகள் எழுந்ததால் விழாவில் பங்கேற்றவா்கள் யாரும் புகைப்படங்கள், விடியோ, பதிவிடவும், விழாக் குழுவின் தடை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com