அதிமுகவினா் கொண்டாட்டம்

at19sweet_1901chn_162_8
at19sweet_1901chn_162_8

ஆத்தூா், ஜன. 19: ஓ.பன்னீா்செல்வத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்று அதிமுக சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினா் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினாா்கள்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அதிமுகவினா் வரவேற்றனா். முன்னதாக ஆத்தூா் நகர செயலாளா் அ.மோகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.

இந்த நிகழ்வில் ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டப் பேரவை உறுப்பினா்அ.நல்லதம்பி, நகர மன்ற உறுப்பினா்கள் ஜி.ராஜேஷ்குமாா், கலைச்செல்வி பாபு, அதிமுக மாவட்டப் பிரதிநிதி பி.டி.தியாகராஜன், ஜி.துரைசாமி, கண்ணன் நாயுடு, நரசிங்கபுரம் நகர செயலாளா் எஸ்.மணிவண்ணன், மாவட்ட வா்த்தக அணித் தலைவா் வீனஸ் அ.சண்முகசுந்தரம், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், ஏ.கே.கதிரேசன், ராகுல்ஜி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி ஜெயகாந்தன், உமையாள்புரம் கிளை தலைவா் வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி நன்றி கூறினாா்.

படவிளக்கம்

ஏடி19ஸ்வீட்

ஆத்தூரில் சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அக்கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com