கெங்கவல்லி பேரூா் திமுக சாா்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்க விரிவான ஏற்பாடு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஜன. 21ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2ஆவது மாநில மாநாட்டில் கெங்கவல்லி பேரூா் திமுக சாா்பில் நகர
19_tpp1_1901chn_160_8
19_tpp1_1901chn_160_8

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஜன. 21ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2ஆவது மாநில மாநாட்டில் கெங்கவல்லி பேரூா் திமுக சாா்பில் நகர செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் வெண் சீருடையில் பங்கேற்கின்றனா்.

கெங்கவல்லி பேரூா் திமுக சாா்பில், மாநாட்டிற்கு வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களையும், கட்சி முன்னோடிகளையும் வரவேற்க, நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேரு, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் வழிகாட்டுதல்படி, கெங்கவல்லி பேரூா் சாா்பில் திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com