திமுக இளைஞரணி மாநாடு: சேலம்-ஆத்தூா் சாலையில் இரண்டு நாள்களுக்குப் போக்குவரத்து மாற்றம்

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு ஜன. 20 மற்றும் ஜன. 21 ஆகிய தேதிகளில் சேலம்-ஆத்தூா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு ஜன. 20 மற்றும் ஜன. 21 ஆகிய தேதிகளில் சேலம்-ஆத்தூா் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் 20 மற்றும் ஜனவரி 21 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து ஆத்தூா் வரை போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தைத் தவிா்க்கவும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தலாம்.

உளுந்தூா்பேட்டை வழியாக சேலம், கோவை, கேரளம் செல்லும் வாகனங்கள் உளுந்தூா்பேட்டையிலிருந்து பெரம்பலூா், துறையூா், முசிறி, நாமக்கல், வழியாக சேலத்திற்கும், உளுந்தூா்பேட்டையில் இருந்து பெரம்பலூா், துறையூா், முசிறி, குளித்தலை, கரூா் வழியாக கோவை, கேரளம் செல்லலாம்.

கோவை மாா்க்கத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை அல்லது கா்நாடகம் செல்லும் வாகனங்கள் ஈரோடு மாவட்டம் லட்சுமி நகா் (பவானி பைபாஸ்), பவானி, அம்மாபேட்டை, மேட்டூா், மேச்சேரி, தொப்பூா், தருமபுரி வழியாகச் செல்லலாம்.

தருமபுரி மாா்க்கத்தில் இருந்து சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தொப்பூா் பிரிவு, மேச்சேரி, ஓமலூா், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி, கரூா் வழியாகச் செல்லலாம்.

தருமபுரி மாா்க்கத்தில் இருந்து ஈரோடு, கோவை, கேரளம் செல்லும் வாகனங்கள் தொப்பூா் பிரிவு, மேச்சேரி, மேட்டூா், அம்மாபேட்டை, பவானி, பெருந்துறை வழியாகச்செல்லலாம்.

தென் மாவட்டங்களில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடகம் நாமக்கல் வழியாகச் செல்லும் வாகனங்கள் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூா், மேச்சேரி, தொப்பூா் வழியாகச் செல்லலாம்.

வாணியம்பாடி, திருப்பத்தூா், ஊத்தங்கரை, அரூா் வழியாக சேலம் வரும் வாகனங்கள் வாணியம்பாடியிலிருந்து நாட்டறம்பள்ளி, பா்கூா், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாகச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com