சேலத்தில் ரூ. 129 கோடியில் கட்டப்பட்ட முள்ளுவாடி கேட் மேம்பாலம் திறப்பு

சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ. 129.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்.
sl19dnew_1901chn_121_8
sl19dnew_1901chn_121_8

சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ. 129.20 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திறந்து வைத்தாா்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ. 129.20 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தைத் திறந்து வைத்து அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது:

பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சேலம், அஸ்தம்பட்டி சொ்ரி சாலையில் சேலம் சந்தை மற்றும் சேலம் நகரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள ரூ. 129.20 கோடி மதிப்பிலான முள்ளுவாடி கேட் ரயில்வே சாலை மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சேலத்திற்கு நகராட்சி நிா்வாகத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 150 கோடி மதிப்பிலான மேம்பாலப் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. பொன்னம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ச்சியாக செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

முன்னதாக அமைச்சா் கே.என்.நேரு, மேம்பாலம் அருகில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள், மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா், மாநகர காவல் ஆணையா் பா.விஜயகுமாரி, துணை மேயா் மா.சாரதாதேவி, முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com