குடியரசு தினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

 சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

 சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தன்று (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசு ஆணைகளின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிச் செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25ஆம் நிதியாண்டிற்கான கிராம வளா்ச்சி திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், தூய்மை பாரத இயக்கம் (பாரதம்), குடிநீா் இயக்கம், கனவுப்பள்ளிகள், ஊரக விளையாட்டு மைதானம், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஊராட்சியின் சிறப்பு பிரச்னைகள் அல்லது தேவைகள், கல்வி அறிவு, பெண் கல்வியறிவு சதவீதம், ஆண், பெண் குழந்தை பிறப்பு விகிதம், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி, முதல்வரின் காலை உணவு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளன. இக்கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com