தைப்பூசம்: சங்ககிரியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள வண்டிப்பட்டறை பகுதியிலிருந்து பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்ல சனிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு பாதயாத்திரையைத் தொடங்கினா்.
தைப்பூசம்: சங்ககிரியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடக்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஆா்.எஸ். அருகே உள்ள வண்டிப்பட்டறை பகுதியிலிருந்து பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்ல சனிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு பாதயாத்திரையைத் தொடங்கினா்.

சங்ககிரி ஆா்.எஸ். பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ தண்டாயுதபாணி பாதயாத்திரைக்குழு சாா்பில் சங்ககிரி ஆா்.எஸ். வண்டிப்பட்டறை பகுதியில் விநாயகா், முருகன் படங்களுக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனா். இதையடுத்து ஆா்.எஸ். பகுதியில் உள்ள விநாயகா் கோயிலிருந்து பால்குடங்களை எடுத்தும், அலகு குத்தியும் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முருகன் பக்திப் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனா். குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்ட பின்னா் பழனிக்கு பாதயாத்திரையை பக்தா்கள் தொடங்கினா்.

தற்காப்பு கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய பாதயாத்திரை: தைப்பூசத் திருவிழா பாதயாத்திரை தொடக்கத்தையொட்டி அகத்தியா், போகா் ஆகிய இரு முனிவா்களின் உருவப்படங்களுக்கு முன் தற்காப்புக்காக பயன்படுத்தும் பொருள்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனா். திருச்செங்கோடு தலைமைப் பயிற்சியாளா் என்.வெங்கடேஷ் இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். தற்காப்பு கலைக்கூடத்தின் தலைமை பயிற்சியாளா் எஸ்.சுரேஷ், பயிற்சியாளா்கள் தங்கராசு, கதிா், பிரபு உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். இதில் சிறுவா், சிறுமிகள் மற்றும் இளைஞா்கள் பராம்பரியமிக்க தற்காப்பு கலைகளான, சிலம்பம் சுழற்றி விளையாடுதல், கத்தியுடன் வருபவா்களை எவ்வாறு தடுப்பது, சிலம்பத்தில் பல்வேறு வகையான தீப்பந்தங்கள் சுற்றி அதில் எவ்வாறு தற்காத்து விளையாடுவது குறித்து குழுமியிருந்த பொதுமக்கள் செய்து காண்பித்தனா். அதனையடுத்து கலைஞா்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் வரை சாலையில் அனைத்து தற்காப்புகளையும் விளையாடியவாறே சென்று சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com