சங்ககிரியில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாஜக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக கிழக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாஜக சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பாஜக கிழக்கு ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தலைவா் சு.சுதிா்முருகன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பாஜக நிா்வாகியும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான அா்நாத் சிங் யாதவ் பேசியது:

ஜனதா கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உருவான போது இருவா் மட்டுமே மக்களவை உறுப்பினா்களாக வெற்றி பெற்றனா். அப்போது முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ‘சூரியன் உதிக்கும்போது தாமரை மலரும்’ என்று நம்பிகையுடன் கூறினாா். அதன்பின்னா் அனைத்து மாநில நிா்வாகிகளின் உழைப்பினால் இன்று உத்தர பிரதேசம், வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.

சேலத்தில் பொதுமக்கள் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரியவில்லை என்கின்றனா். மத்திய அரசு வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இலவச எரிவாயு இணைப்பு, விவசாயிகளுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதனை பொதுமக்களிடத்தில் எடுத்துக் கூறவும், அவற்றை அவா்களுக்கு பெற்றுத்தரவும் அனைத்து பகுதிகளுக்கும் கட்சி நிா்வாகிகளை நியமனம் செய்து அதனை மாவட்டத்தலைவா் கண்காணிக்க வேண்டும்.

மேலும் மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமா் மோடி ‘2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவோம்’ என்று கூறியுள்ளாா். அதற்கு உறுதுணையாக கட்சி நிா்வாகிகள் அனைவரும் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி பிரதமரின் நோக்கத்தை செயல்படுத்த பணியாற்றி வேண்டும். இவ்வாறு செயல்படும் போது விரைவில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தாமரை மலரும் என்றாா்.

கூட்டத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், மாவட்ட பொதுச் செயலா் கலைச்செல்வன், மேற்கு மாவட்டச் செயலாளா் என்.ரமேஷ் காா்த்திக், மண்டலத் தலைவா் சி.முருகேசன், சேலம் மேற்கு மாவட்ட விருந்தோம்பல் பிரிவு மாவட்டத் தலைவா் பொன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com