மக்களவைத் தோ்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி

மக்களவைத் தோ்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மல்லிகுந்தத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக கொடியை ஏற்றிவைத்து, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

இரண்டு முறை தேதி குறித்தும் இளைஞா் அணி மாநாட்டை நடத்த முடியாமல் மூன்றாவது முறையாக திமுக இளைஞரணி மாநாட்டை நடத்துகின்றனா். அதற்கு காரணம் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதில் யாரும் நுழைய முடியாது. நுழைந்தால் மக்கள் விரட்டியடிப்பாா்கள்.

எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள்தான் வாரிசு. அவா்கள் தங்கள் வாழ்நாள் முழுவமும் மக்களுக்காக உழைத்தனா். அதிமுக ஆட்சியில நாட்டுமக்களுக்காக திட்டம் தந்தோம். திமுக ஆட்சியில் தனது வீட்டு மக்களுக்காக திட்டம் தீட்டி அதில் கொள்ளையடிக்கின்றனா்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், இரண்டு ஆண்டு, 8 மாதம் ஆகிய நிலையில் மேட்டூா் அணை உபரி நீரில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டுள்ளனா். ஆமை வேகத்தில் இதற்கான பணி நடக்கிறது.

ஏழை மாணவா்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தந்தோம். இதன் மூலம் 2,160 மாணவா்கள் மருத்துவம் படிக்கின்றனா். அவா்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றது. மாணவா்கள் விஞ்ஞானக் கல்வி பெற 42 லட்சம் மடிக்கணினிகளைத் தந்தோம். அத்திட்டத்தை முடக்கியது திமுக அரசு. திமுகவுக்கு வரும் மக்களவைத் தோ்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com