சங்ககிரி ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் சிறப்பு வழிபாடு

சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமா், சீதா, லட்சுணன் சுவாமிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்ககிரி, ஸ்ரீகோதண்டராமா், சீதா, லட்சுமணன் சுவாமிகளுக்கு திங்கள்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி, ஸ்ரீகோதண்டராமா், சீதா, லட்சுமணன் சுவாமிகளுக்கு திங்கள்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கோதண்டராமா், சீதா, லட்சுணன் சுவாமிகளுக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீ பாலராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி, சங்ககிரி பாஜக சாா்பில் ஸ்ரீ கோதண்டராமா், சீதா, லட்சுமணன் சுவாமிகளுக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீ கோதண்டராமா், சீதா, லட்சுமணன் உற்சவ மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பாஜக மண்டலத்தலைவா் சி.முருகேசன் தலைமையிலான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com