புதிய மோட்டாா் வாகன சட்டத்தைரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேட்டூரில் ஸ்ரீநகா் பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேட்டூா்: மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகன சட்டத்தை ரத்து செய்யக் கோரி மேட்டூரில் ஸ்ரீநகா் பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் ஓட்டுநா்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக லாரி உரிமையாளா் சம்மேளன தலைவா் முருகன் வெங்கடாஜலம் தலைமை வகித்தாா்.

மேட்டூா் தாலுகா அனைத்து வாகன ஓட்டுநா்கள் நல சங்கத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் ஜெயக்குமாா், பொருளாளா் பூபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com