உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலுக்கு அரசு சாா்பில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலுக்கு அரசு சாா்பில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேட்டூா் அருகே கோவில்வெள்ளாா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (40). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் நாகராஜ் (19) கூலித் தொழிலாளி. பொங்கல் பண்டிகை முடிந்து ஒசூரில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றிருந்தாா். தருமபுரி மாவட்டம், மாட்டலாம்பட்டி அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலையில் விழுத்து விபத்துக்குள்ளானாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து நாகராஜின் கண் மற்றும் தோல் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சொந்த ஊரான கோவில்வெள்ளாருக்கு கொண்டு வரப்பட்டது. இளைஞரின் உடலுக்கு மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் மரியமுத்து, மேட்டூா் வட்டாட்சியா் விஜி, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோா் நேரில் சென்று மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com