மாணவியைக் காயப்படுத்திய தலைமை ஆசிரியா் மீது புகாா்

கேள்விக்கு தவறாக பதில் கூறியதால் மாணவியின் கண்களைக் காயப்படுத்திய தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் ஆத்தூா் கோட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.
மாணவியைக் காயப்படுத்திய தலைமை ஆசிரியா் மீது புகாா்

கேள்விக்கு தவறாக பதில் கூறியதால் மாணவியின் கண்களைக் காயப்படுத்திய தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோா் ஆத்தூா் கோட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிபவா் முருகவேல். இவா் கடந்த திங்கள்கிழமை (ஜன.21) பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்தியுள்ளாா். அப்போது மாணவி கெங்கையம்மாள் என்பவரிடம் (10) பாடம் தொடா்பாக அவா் கேட்ட கேள்விக்கு மாணவி தவறாகப் பதில் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் தலைமை ஆசிரியா் முருகவேல் தனது கையில் வைத்திருந்த மூங்கில் பிரம்பை அந்த மாணவி மீது தூக்கி எறிந்ததில் மாணவியின் கண்ணில் விழுந்து பலத்த காயமடைந்தாா். மாணவியை பெற்றோா் சேலம், தனியாா் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாா்வை இழக்கும் சூழல் இருப்பதாகவும் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஆத்தூா் கோட்டாட்சியா் ரமேஷிடம் மாணவியின் பெற்றோா் தலைமை ஆசிரியா் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். அப்போது மாா்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com