அருநூற்றுமலை அரசு பள்ளியில் தடை ஓட்டப் போட்டி

வாழப்பாடியை அடுத்த அருற்றுமலை அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தடைகளைக் கடந்து இலக்கை அடையும் கிராஸ் கண்ட்ரி தடை ஓட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
அருநூற்றுமலையில் நடைபெற்ற தடை ஓட்டப் போட்டி.
அருநூற்றுமலையில் நடைபெற்ற தடை ஓட்டப் போட்டி.

வாழப்பாடியை அடுத்த அருற்றுமலை அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தடைகளைக் கடந்து இலக்கை அடையும் கிராஸ் கண்ட்ரி தடை ஓட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

கிராஸ் - கண்ட்ரி ஓட்டம் என்பது உயரமான மலைகள், குன்றுகள், பள்ளங்கள், புல்வெளிகள், சகதிகள், நீரோடைகள் போன்ற தடைகளைக் கடந்து இலக்கை அடையும் ஓட்டமாகும். இப் போட்டியில் முதல் 9 இடங்களை பிடிக்கும் வீரா், வீரங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த புதுமையான விளையாட்டுப் போட்டி அண்மைக்காலமாக சேலம் மாவட்ட மலைப் பகுதிகளிலும் நடந்து வருகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூற்றுமலை அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 3 ஆவது ஆண்டாக கிராஸ் கண்ட்ரி தடை ஓட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியை ஜெ.சாந்தி எஸ்தா் ராணி வரவேற்றாா். தமிழ்நாடு பழங்குடியினா் விளையாட்டு சங்கத் தலைவரும், ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.தமிழ்ச்செல்வன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் ஹேமலதா விஜயகுமாா் ஆகியோா் த்து போட்டியை தொடங்கிவைத்தனா்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆலடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, துனைத் தலைவா் சத்தியராசு, ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா மகேந்திரன், பள்ளி மேலான்மைக் குழு தலைவா் மைலி, பெற்றோா்-ஆசிரியா் கழக தலைவா் தேவேந்திரன் ஆகியோா் பரிசுகள், பதக்கங்களை வழங்கி பாராட்டினா். பள்ளி உடற்கல்வி இயக்குநா் மு.தங்கதுரை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com