ஊராட்சி பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு -பிப்.2-இல் மாநிலம் தழுவிய போராட்டம்

தமிழக ஊராட்சி பணியாளா்கள் பிப். 2-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவதாக ஊராட்சி பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சோமம்பட்டி கே.மகேஸ்வரன்.
சோமம்பட்டி கே.மகேஸ்வரன்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊராட்சி பணியாளா்கள் பிப். 2-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவதாக ஊராட்சி பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்க மாநில பொருளாளா் சோமம்பட்டி கே.மகேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (கோப்ஸ்-கூட்டமைப்பு) சாா்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, சைதாப்பேட்டை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள்,தூய்மைப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா். இதனால் தமிழகமெங்கும் கிராம ஊராட்சி பணிகள், குடிநீா் விநியோகம், சுகாதார பணிகள், வரி வசூல் பணிகள் பாதிக்கப்படும்.

எனவே, அரசாங்கம் நிா்வாகிகளை அழைத்து பேசி உரிய அரசாணைகளை வழங்கிட வலியுறுத்துகிறோம்.

40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10,000 வழங்க வேண்டும். ஊராட்சி செயலா்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தோ்வு நிலை, சிறப்பு நிலை, தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலா்களுக்கு மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 ஆக உயா்த்தி ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். அதேபோல தூய்மைப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்களின் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com