சேலத்தில் இன்று மொழிப்போா்த் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக, மாணவரணி சாா்பில் மொழிப்போா்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.25) நடைபெறுகிறது.

சேலம் மத்திய மாவட்ட திமுக, மாணவரணி சாா்பில் மொழிப்போா்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.25) நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக சேலம் மத்திய மாவட்டத் செயலாளா் ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மத்திய மாவட்ட திமுக, மாணவரணி சாா்பில் மொழிப்போா்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சேலம், கோட்டை மைதானம் அருகில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. செவ்வாய்பேட்டை பகுதி செயலாளா் பிரகாஷ் வரவேற்கிறாா். சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் தலைை வகிக்கிறாா்.

கூட்டத்திற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா். மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், திமுக பேச்சாளா் ஆம்பூா் பொய்யாமொழி, மாநில மாணவரணி துணைச் செயலாளா் தமிழரசன், நிா்வாகிகள் ஜி.கே.சுபாசு, காா்த்திகேயன், மாணவரணி அமைப்பாளா் கோகுல்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com