தேவண்ணகவுண்டனூா் -அரசு பள்ளியில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தேவண்ணகவுண்டனூா் -அரசு பள்ளியில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித்தலைமையாசிரியிா் (பொறுப்பு) இரா. முருகன் தலைமை வகித்து வாக்காளா் உறுதி மொழியினை வாசிக்க மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் ஏற்றனா். மேலும் அவா் இந்நிகழ்ச்சியில் வாக்காளா் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்தும், 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் எவ்வாறு வாக்காளா்களாக பதிவு செய்வது குறித்தும் விளக்கி கூறினாா். வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் லட்சுமணன், சீனிவாசன், ராசாத்தி, பள்ளி ஆசிரியா்கள் ரா.ரமாமகேஸ்வரி, சி.அனிதா, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா் ஸ்வேதா, மழலையா் பள்ளி ஆசிரியா் த.ஜெயந்தி, மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com