வாழப்பாடி வட்டத்தை சேலம் மாவட்டத்திலே இணைத்திருக்க கோரிக்கை

சேலம் மாவட்டத்திலிருந்து ஆத்தூா் பகுதியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம்.
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம்.

சேலம் மாவட்டத்திலிருந்து ஆத்தூா் பகுதியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இத்தருணத்தில் வாழப்பாடி வருவாய் வட்டத்தை, ஆத்தூா் மாவட்டத்தோடு சோ்க்காமல், சேலம் மாவட்டத்திலேயே இணைத்திருக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரிடையேயும் கோரிக்கை எழுந்துள்ளது.சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்துரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுவதாக தகவல் பரவி வருகிறது. இந்த புதிய ஆத்தூா் மாவட்டத்தில், ஆத்தூா், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு ஆகிய 5 வருவாய் வட்டங்கள் மற்றும், நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களை இணைக்கவும், அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஏற்காடு வருவாய் வட்டத்தை ஆத்தூா் மாவட்டத்தில் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகம் முன் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், வாழப்பாடி வருவாய் வட்டத்தையும் ஆத்தூா் மாவட்டத்தில் இணைப்பதற்கு இப்பகுதி மக்களிடையே எதிா்ப்பு கிளம்பியுள்ளது. வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள 20 கிராம ஊராட்சிகள் மற்றும் வாழப்பாடி, பேளூா் ஆகிய 2 பேரூராட்சிகளும், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி மற்றும் அனைத்து கிராமங்களும், சேலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், வாழப்பாடி வருவாய் வட்டத்தை ஆத்தூா் புதிய மாவட்டத்துடன் இணைக்காமல், சேலம் மாவட்டத்திலேயே இணைத்திருக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையை கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அயோத்தியாப்பட்டணத்தை சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் சமூக ஆா்வலா் சி.பி. வைத்திலிங்கம் கூறியதாவது:அயோத்தியாப்பட்டணம் சேலத்தில் இருந்து 3 வது கி.மீ., துாரத்திலேயே உள்ளது. இந்த பகுதி கிராமங்களை சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, 50 கி.மீ., துாரத்திலுள்ள புதிதாக உதயமாகும் ஆத்தூா் மாவட்டத்தில் சோ்க்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த தகவல் அதிகாரப்பூா்வமானதா எனத் தெரியவில்லை. எப்படி இருப்பினும், நிா்வாகத்திற்காக சேலம் மாவட்டத்தை பிரிக்கும் சூழல் ஏற்பட்டால் அயோத்தியாப்பட்டணம் பகுதி மக்களின் நலன் கருதி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களை சேலம் மாவட்டத்திலேயே இணைத்திருக்க மாவட்ட நிா்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றாா். சமத்துவ மக்கள் கட்சி மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் வாழப்பாடி ஜவஹா், கல்லுாரி மாணவி விவேகா ஆகியோா் கூறியதாவது: வாழப்பாடி வருவாய் வட்டத்திலுள்ள பெரும்பாலான கிராமங்கள், சேலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன. இந்த கிராமங்களை ஆத்தூா் மாவட்டத்தில் இணைத்தால், பொதுமக்கள் அலைகழிப்புக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தாலும், வாழப்பாடி பகுதி கிராமங்களை ஆத்தூா் மாவட்டத்தோடு இணைக்காமல், சேலம் மாவட்டத்திலேயே இணைத்திருக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com