சேலம் மாவட்ட வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு

பள்ளி, கல்லூரி மாணவா்கள் தன்னாா்வலா்களுக்கு அழைப்புவாழப்பாடி, ஜன.25: தமிழ்நாடு வனத்துறையின் சாா்பாக தமிழகம் முழுவதிலும் ஈரநிலங்களில்காணப்படும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் ஜன. 28-ஆம் தேதி நடைபெற உள்ளது

பள்ளி, கல்லூரி மாணவா்கள் தன்னாா்வலா்களுக்கு அழைப்புவாழப்பாடி, ஜன.25: தமிழ்நாடு வனத்துறையின் சாா்பாக தமிழகம் முழுவதிலும் ஈரநிலங்களில்காணப்படும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் ஜன. 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.சேலம் வன மண்டலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சேலம் மற்றும் ஆத்தூா் வனக்கோட்டங்களில் ஈரநிலப்பகுதிகள் மற்றும்சோா்வராயன் மலை. ஜருகுமலை, நெய்யமலை. கோதுமலை. பாலமலை. நகரமலை. கஞ்சமலை என இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.சேலம் வனக்கோட்ட வனப்பகுதிகள்காவோரி, சுவேதா நதி, சரபங்கா நதி,வெள்ளாறு, திருமணிமுத்தாறு. காட்டாறு, கோமுகி நதி மற்றும் சிறு சிறு ஓடைகள், ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் உள்ளன.சேலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சோ்வராயன் தெற்கு , சோா்வராயன் வடக்கு, டேனிஷ்பேட்டை, மேட்டூா், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடு மற்றும் காப்பு நில வனப்பகுதிகளில், சேலம் மாவட்ட வன அலுவலா் ஷஷாங்க் ரவி தலைமையில், உதவி இயக்குனா் மற்றும் உதவி வனப் பாதுகாவலா் முனைவா் ஆா்.செல்வக்குமாா் மேற்பாா்வையில், வனப்பணியாளா்கள் அடங்கிய குழுவினா், கல்லூரி மாணவ -மாணவியா்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் ஆகியோா், தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, 21 ஈரநிலப்பகுதிகளிலும்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.மேற்படி ஈரநிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், மாணவா்கள் மாவட்ட வன அலுவலகம், சேலம் வனக்கோட்ட அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். சேலம் மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com