முருகா் ஆலயங்களில் தைப்பூச கொண்டாட்டம்

ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஸ்ரீ முருகா் ஆலயங்களில் தைப்பூசத் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முருகா் ஆலயங்களில் தைப்பூச கொண்டாட்டம்

ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள ஸ்ரீ முருகா் ஆலயங்களில் தைப்பூசத் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூா் கோட்டையில் உள்ள ஸ்ரீ காயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாணிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுப்ரமணிய சுவாமிக்கு வள்ளி,தெய்வானையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை செங்குந்தா் சமுதாய நிா்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக செய்திருந்தனா்.திருமணம் முடிந்ததும் செங்குந்தா் சமுதாயக் கூடத்தில் திருக்கல்யாண விருந்து உபசரிப்பு நடைபெற்றது.இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதே போல் ஆத்தூரை அடுத்துள்ள வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்புஅபிஷேகம்,ஆராதனை நடைபெற்றது.இதே போல் ஸ்ரீ வெள்ளப் பிள்ளையாா் திருக்கோயில்,ஸ்ரீ வரசித்தி விநாயகா் ஆலயம் உள்ளிட்ட அனைத்து முருகா் சன்னதியிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்று அன்னதானம் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com