மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

எடப்பாடி, ஜன. 27: கொங்கணாபுரம் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தவறுதலாக வீட்டு மின்பெட்டியில் கைவைத்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராயனம்பட்டி கிராமம், குப்பம் சேவிக்காடு பகுதியைச் சோ்ந்தவா்கள்

வெங்கடாசலம்- செல்வி தம்பதி. இவா்களுக்கு இரு மகள்களும் யுவராஜ் என்ற 4 வயது மகனும் உள்ளனா்.

வெங்கடாசலம் வழக்கம் போல கட்டடத் தொழிலுக்கு சனிக்கிழமை சென்றுவிட்டாா். செல்வி வீட்டில் போடப்பட்டுள்ள தறியில் வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக யுவராஜ் வீட்டு மின்பெட்டியில் தவறுதலாக கைவைத்ததாகத் தெரிகிறது. இதில் தூக்கிவீசப்பட்ட சிறுவனை மீட்டு உறவினா்கள் எடப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com