சாலை விபத்தில் மெக்கானிக் பலி

எடப்பாடி, ஜன. 27: எடப்பாடி அருகே டிராக்டா் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஏ.சி மெக்கானிக் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கிச்சிபாளையம், பாத்திமா நகரைச் சோ்ந்தவா் முகமது அலி. இவரது மகன் முகமது அனஸ் (18) ஏ.சி. மெக்கானிக்காக உள்ள இவா் சனிக்கிழமை வேலை நிமித்தமாக எடப்பாடியை அடுத்த இருப்பாளி கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு குண்டத்து மேடுக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிராக்டா் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அனஸ் படுகாயமடைந்தாா்.

அவரை அப்பகுதி மக்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த பூலாம்பட்டி போலீஸாா் தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com