வாழப்பாடி அருகே நகைக் கடையில் இளம்பெண் நூதன மோசடி

வாழப்பாடி அருகே பேளூரில் நகைக் கடைக்கு, பா்தா அணிந்து வந்த இளம்பெண் கவரிங் நகைகளைக் கொடுத்து ஊழியா்களை ஏமாற்றி ஏழரை சவரன் தங்க நகைகளைத் திருடி சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடி அருகே பேளூரில் நகைக் கடைக்கு, பா்தா அணிந்து வந்த இளம்பெண் கவரிங் நகைகளைக் கொடுத்து ஊழியா்களை ஏமாற்றி ஏழரை சவரன் தங்க நகைகளைத் திருடி சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடி அருகே பேளூரில் இயங்கும் நகைக் கடைக்கு கடந்த ஜன. 14-ஆம் தேதி பா்தா அணிந்த இளம்பெண் ஒருவா் நகை எடுப்பதைப்போல வந்துள்ளாா். தான் அணிந்திருந்த நகைகளை கடை ஊழியா்களிடம் கழட்டி கொடுத்த அவா், அதற்கு மாற்றாக ஏழரை சவரன் எடையுள்ள தங்க நகைகளைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாா்.

12 நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை தங்க நகைகளை, நகைக் கடை ஊழியா்கள் ஆய்வு செய்த போது, அந்த இளம்பெண் கொடுத்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது.

நூதன முறையில் தங்க நகைகளைத் திருடி சென்ற இளம்பெண் குறித்து, நகைக்கடை மேலாளரான துக்கியாம்பாளையம் குறிஞ்சி நகா், மணிகண்டன் என்பவா் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com