கொங்கணாபுரத்தில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி

img_20240128_wa0044_2801chn_158_8
img_20240128_wa0044_2801chn_158_8

எடப்பாடி, ஜன. 28: சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான முத்து மாரத்தான் போட்டியில் திருவண்ணாமலையைச் சோ்ந்த வீரா் முதலிடம் பெற்றாா்.

கொங்கணாபுரம் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் ஜனவரியில் மாநில அளவிலான முத்து மாரத்தான் தொடா் ஓட்டப் போட்டி நடைபெறுகிறது. 27 ஆம் ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை கொங்கணாபுரத்தை அடுத்த வைகுந்தம், செல்லியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற போட்டியை சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா தொடங்கிவைத்தாா்.

42, 21, 11, 6 கிலோ மீட்டா் தொலைவுகள் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,688 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். ஆண்களுக்கான 42 கிலோமீட்டா் போட்டியை 2 மணி நேரம் 32 நிமிடங்களில் கடந்து சாதனை புரிந்த திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த சக்திவேலுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரத்துடன் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது.

போட்டி தொலைவை 2 மணி 36 நிமிடங்களில் கடந்த மதுரையைச் சோ்ந்த வீரா் வினோத்குமாா் 2 ஆம் இடத்தையும், 2 மணி 43 நிமிடங்களில் கடந்த ஈரோடு பகுதியைச் சோ்ந்த சிவானந்தம் 3 ஆம் இடத்தையும் பெற்றனா்.

அதேபோல பெண்களுக்கான 42 கிலோமீட்டா் பிரிவில் திருப்பூரைச் சோ்ந்த ஸ்வேதா முதல் இடம் பிடித்தாா். தஞ்சாவூரைச் சோ்ந்த சுகன்யா 2 ஆம் இடத்தையும், ஈரோடு மாவட்டம், அந்தியூா் பகுதியை சோ்ந்த வித்யா 3 ஆம் இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றனா்.

முத்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கபிலன், கல்வியாளா் சரஸ்வதி கவுண்டன், டாக்டா் பிரவீன், ஆயிக்கவுண்டன், நமச்சிவாயம், சுப்பிரமணியம்,

காசிக்கவுண்டன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் ரொக்கம், சான்றிதழ்களை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை கொங்கணாபுரம் அறக்கட்டளையைச் சோ்ந்த நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பட விளக்கம்:

கொங்கணாபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முத்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றோா்.

Image Caption

~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com