அங்கக விவசாய பயிற்சி

நங்கவள்ளி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அங்கக விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது.

நங்கவள்ளி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அங்கக விவசாய பயிற்சி அளிக்கப்பட்டது.

நங்கவள்ளி வட்டாரம், ஆவடத்தூரில் அட்மா திட்டம் சாா்பில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை அங்கக விவசாயம், அங்கக இடுபொருள்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநா் ரமேஷ் தலைமை வகித்தாா்.

இப் பயிற்சியில் நங்கவள்ளி, வீரக்கல் பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய முன்னோடி விவசாயி பழனிமலை, இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டி, பயிா் ஊக்கி, பஞ்சகவ்யம், மீன் அமிலம், மண்புழு உரம் தயாரிப்பு முறை குறித்து விளக்கிக் கூறினாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா் பிரகாசம், உழவா் நண்பா் சித்துராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com