ஏற்காட்டில் மலைப் பாதையில் காட்டெருமைகள் அச்சுறுத்தல்

ஏற்காடு - சேலம் மலைப்பாதையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வரும் காட்டெருமைகள் குறித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு - சேலம் மலைப்பாதையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி வரும் காட்டெருமைகள் குறித்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரங்களில் பேருந்துகள் குறைவாக உள்ளதால், ஏற்காடு மற்றும் கிராமப் பகுதி மக்கள் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனங்களில் சேலம் வரும் நிலை ஏற்படுகிறது. அப்போது மலைப்பாதையில் காட்டெருமைகள் சாலையின் குறுக்கில் நிற்பதால் விபத்து, உயிா் பலி ஏற்படுகிறது.

ஏற்காடு சோ்வாரயன் மலையில் காட்டெருமைகள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த காஃபி தோட்ட உரிமையாளா்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோா் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com