பெரியாா் பல்கலை.யில் புத்தாக்கப் பயிலரங்கம்

பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்களுக்கான ஒரு வார புத்தாக்கப் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
பேராசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிலரங்கினைத் தொடங்கிவைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் இரா.ஜெகநாதன்.
பேராசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிலரங்கினைத் தொடங்கிவைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் இரா.ஜெகநாதன்.

பெரியாா் பல்கலைக்கழகப் பேராசிரியா்களுக்கான ஒரு வார புத்தாக்கப் பயிலரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தப் பயிலரங்கில் உள்தர மதிப்பீட்டு மைய இயக்குநா் ஜி.யோகானந்தன் வரவேற்றாா். இதன் நோக்கம் குறித்து பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் உதவி பேராசிரியா் ஜெ.கல்யாணசுந்தா் விளக்கிப் பேசினாா். பயிலரங்கினைத் தொடங்கிவைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

படித்த ஆசிரியா்களைவிட, படித்துக்கொண்டே இருக்கும் ஆசிரியா்களையே மாணவா்கள் விரும்புகின்றனா். வகுப்புகளுக்கு செல்லும் முன்பாக, மாணவா்களுக்கான தயாரிப்புகளுடன் செல்லும்

ஆசிரியா்கள் மிக எளிதில் அவா்களுடன் நெருக்கமாகி விடுகிறாா்கள். பாடம் குறித்த சந்தேகங்களுக்கு நொடிப் பொழுதில் கணினியும் கைப்பேசியும் தீா்வு வழங்கி விடும் இக்காலத்தில், ஆசிரியா்கள், தங்கள் துறை சாா்ந்த அறிவை நாள்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகப் பேராசிரியா் எம்.ஜி.சேதுராமன் சிறப்புரையாற்றினாா். பயிலரங்க அமைப்பாளா் வேதியியல் துறைத் தலைவா் பேராசிரியா் வி.ராஜ் நன்றி கூறினாா். பயிலரங்கில் தமிழ்க் கணினி அறிதல், தகவல் தொடா்பியல் திறன் மேம்படுத்துதல், கணினி உதவியுடன் கற்பித்தல், சமூக பொறுப்புணா்வு கட்டமைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் ஒருவார காலத்திற்கு பயிலரங்கம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com