தொழு நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோய் தடுப்பு விழிப்புணா்வு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தொழு நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழு நோய் தடுப்பு விழிப்புணா்வு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பேளூா் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள், பணியாளா்களுக்கு தொழு நோய் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இம் முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா்கள் ரம்யா, வெற்றிவேல் ஆகியோா் தொழு நோய் பரவும் முறைகள், தடுப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனா்.

சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் அனைவரும், தொழு நோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பேளூா் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், வாழப்பாடி உதய விவேகா பயிற்சி கல்லூரி மாணவிகளின், தொழு நோய் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேளூா் வட்டார மருத்துவமில்லா மேற்பாா்வையாளா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com