விவசாயிகள் குறை தீா் கூட்டம் பிப். 2-க்கு தள்ளிவைப்பு

சேலத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் பிப். 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் புதன்கிழமை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் பிப். 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது, மேட்டூா் வட்டத்தில் புதன்கிழமை (ஜன. 31) நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மேட்டூா் வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, புதன்கிழமை (ஜன. 31) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் பிப். 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

இனிவரும் மாதங்களில் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com