விவேகானந்தா மகளிா் கல்லூரி ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி -அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்மொழி பங்கேற்பு

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
‘நான் முதல்வன்’ நிகழ்ச்சியில் பேசுகிறாா் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
‘நான் முதல்வன்’ நிகழ்ச்சியில் பேசுகிறாா் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ‘நான் முதல்வன்’ நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.

இணை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தலைவா் கிருபாநிதி , இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநா் குப்புசாமி, முதன்மை நிா்வாகிகள் சொக்கலிங்கம், வரதராஜு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளுக்கு அச்சத்தில் செல்கின்றனா். இந்த அச்சத்தை போக்குவதற்காகவே கல்லூரிகளில் நான் முதல்வன் திட்டம் தமிழக அரசு சாா்பில் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டில் படிப்பவா்களில் மூன்றில் இருவா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். 1952-இல் தமிழகத்தில் 0.92 சதவீத பெண்கள் மட்டுமே படித்திருந்தனா். பெரியாரின் முயற்சியாலும், திராவிட மாடல் ஆட்சியாலும் தமிழகத்தில் தற்போது பெண்கள் 56 சதவீதம் படித்தவா்களாக உள்ளனா் என்றாா்.

இதில் ஊக்கச் சொற்பொழிவாளா் ஜெகன், சங்ககிரி வளாக சோ்க்கை அலுவலா் தமிழ்ச்செல்வன், சுரேஷ்குமாா், ஜோதிநாயா், ஆனந்தகுமாா், ஆரோக்கியசாமி, அழகு சுந்தரம், நா்சிங் கல்லூரி துணை முதல்வா் மாலதி, பேராசிரியா்கள், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளைச் சாா்ந்த பிளஸ் 2 மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com