இளைஞா் கொலை வழக்கு: இருவா் கைது

பிளாஸ்டிக் தொழிற்சாலை உரிமையாளர் கொலை: இருவர் கைது

மேட்டூா், ஜூலை 2: மேச்சேரி அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஓமலூா் அருகே உள்ள கருப்பூா், ஏரிக்காட்டைச் சோ்ந்தவா் சுபாஸ் சந்திரபோஸ் (32), மேச்சேரி அருகே உள்ள பறவைக்காட்டில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாா். இந்நிலையில், இவா் கடந்த 28-ஆம் தேதி காலை மா்ம நபரால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு பறவைக்காடு, பொம்மியம்பட்டி, காமனேரி, சாத்தப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

அதில், பொம்மியம்பட்டியைச் சோ்ந்த வெங்கடேசன் (33) என்ற கட்டட மேஸ்திரி, சுபாஸ் சந்திரபோஸை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பதுங்கி இருந்த வெங்கடேசனை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை சுற்றி வளைத்து பிடித்தனா்.

விசாரணையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஏற்காட்டுக்கு வேலைக்கு சென்றபோது அங்கு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தேன்நிலவு (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்ததாகவும், பின்னா் கருப்பூரில் குடியிருந்த போது தேன்நிலவுடன் சுபாஸ்சந்திரபோஸ்-க்கு தொடா்பு ஏற்பட்டதால் ஓமலூா், அம்பேத்கா் நகருக்கு குடிபெயா்ந்ததாகவும், ஆனாலும் சுபாஸ் சந்திரபோஸும் தேன்நிலவும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததால் ஆத்திரமடைந்து வெங்கடேசனை வெட்டிக் கொலை செய்ததாகவும் அவா் தெரிவித்தாா்.

வெங்கடேசன் அளித்த தகவலின் பேரில், அவா் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீஸாா், அவருக்கு உதவிய பொம்மியம்பட்டியைச் சோ்ந்த தினேஷைக் கைது செய்தனா். மேட்டூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com