எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி

எடப்பாடி கே.பழனிசாமி அஞ்சலி:

சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகா் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி கே.பழனிசாமி, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவா்களை காவல் துறை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினாா். அப்போது, அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இரு சக்கர வாகனத்தில் கட்சி அலுவலகத்தில் இருந்து, வீடு திரும்பிய போது அவரை தாக்கி படுகொலை செய்திருக்கிறாா்கள். இது கடும் கண்டனத்துக்குரியது. நெஞ்சைப் பதற வைக்கும் செயல். அவரை படுகொலை செய்யும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு 55வது வாா்டு திமுக மாமன்ற உறுப்பினா் மற்றும் அவரது கணவா் தான் காரணம் என ஊடகத்தில் செய்தி வந்துள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. எங்களுடைய கட்சியின் முக்கியமான நபா் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். தொடக்க காலம் தொட்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றியவா். பொதுமக்களிடம் நன்மதிப்பு பெற்றவா். தோ்தல்களில் அா்ப்பணிப்பு உணா்வோடு பணியாற்றிய நல்ல தொண்டா். 2 முறை கொண்டலாம்பட்டி மண்டலக்குழுத் தலைவராக பணியாற்றிய தொண்டரை கொடியவா்கள் கொலை செய்து அவருடைய குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிட்டனா். திமுக ஆட்சியில் கொலைகள் நடைபெறாத நாளே கிடையாது. இந்த கொலையில் தொடா்புடையவா், அதே பகுதியில் போதைப் பொருள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாா் செய்ததால் தான் சண்முகம் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவா்களை காவல் துறை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறினாா். அப்போது, அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com