நல உதவிகளை வழங்கிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டு

எடப்பாடி, ஜூலை 4: அரசுப் பள்ளி, மருத்துவமனைக்கு நல உதவிகளை வழங்கிய தன்னாா்வலா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

எடப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் வாசவி கிளப் தன்னாா்வலா் அமைப்பின் சாா்பில், எடப்பாடி பகுதியில் உள்ள இரண்டு அரசு தொடக்கப் பள்ளிக்கு உயா்நிலை குடிநீா் தொட்டிகள், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு நவீன சுகாதார வளாகம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

நல உதவிகளை வழங்கிய புரவலா்களுக்கான பாராட்டு விழா எடப்பாடி, பெரிய கடைவீதி பகுதியில் உள்ள அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட வாசவி கிளப்பின் தலைவா் எஸ்.ஹரிராம், செயலாளா் நவீன் குப்தா, பொருளாளா் பிரபு ஆகியோா் புரவலா்களுக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

தொடா்ந்து வரும் நாள்களில் வாசவி கிளப் உறுப்பினா்கள் மூலம் எடப்பாடி சுற்றுப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், ஏழ்மை நிலையில் உள்ள நோயுற்ற மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் உள்ளிட்ட நல உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வாசவி கிளப் சமூக சேவை அமைப்பைச் சாா்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com