மின்னொளியில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி தொடக்கம்

மின்னொளியில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி தொடக்கம்

சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை மின்னொளியில் தொடங்கியது.

சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை மின்னொளியில் தொடங்கியது.

சேலம், மரவனேரியில் உள்ள புனித பால் மேல்நிலைப் பள்ளியில் மின்னொளியில் தொடங்கிய இப்போட்டிகள் வரும் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில், சென்னை ஜேப்பியாா் கல்லூரி கைப்பந்து அணி, சிவந்தி கைப்பந்து கழக அணி, எக்ஸலென்சி அணி, தமிழக காவல் துறை சென்னை அணி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதற்காக ரூ. 6 லட்சம் செலவில் மின்னொளியில் கைப்பந்து திடல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வெட்டை சேலம் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் முன்னிலையில், சேலம் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் திறந்து வைத்தாா். இதில், சேலம் மாநகர நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையா் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

முதல் போட்டியில், சென்னை சிவந்தி கைப்பந்து கழக அணி மற்றும் ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. போட்டியில் முதல்பரிசு வெல்லும் அணிக்கு ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச் செயலாளா் மாா்ட்டின் சுதாகா், சேலம் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்க உள்ளனா். போட்டிக்கான ஏற்பாடுகளை புனித பால் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் அலெக்ஸ் பிரபு, சேலம் மாவட்ட கைப்பந்து கழகத்தினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com