கொங்கணாபுரத்தில் ரூ. 46 லட்சத்துக்கு பருத்தி, எள் விற்பனை

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ. 46 லட்சம் மதிப்பிலான பருத்தி, எள் வணிகம் நடைபெற்றது.

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், ரூ. 46 லட்சம் மதிப்பிலான பருத்தி, எள் வணிகம் நடைபெற்றது.

இக்கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் பொது ஏலத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமாா் 1,500 பருத்தி மூட்டைகள், 250 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 6,240 முதல் ரூ. 7,479 வரை விற்பனையானது. தொடா்ந்து நடைபெற்ற எள்ளுக்கான பொது ஏலத்தில், வெள்ளை ரக எள் கிலோ ஒன்று ரூ. 106.50 முதல் ரூ. 120 வரையிலும், சிகப்பு ரகம் கிலோ ஒன்று ரூ. 108.50 முதல் ரூ. 126.90 வரையிலும் என மொத்தம் 55 மூட்டை எள் விற்பனையானது.

இச்சங்கத்தில் நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ. 41.50 லட்சம் மதிப்பிலான பருத்தியும், ரூ. 4.60 லட்சம் மதிப்பிலான எள்ளும் விற்பனையாயின.

X
Dinamani
www.dinamani.com