மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

மேட்டூா் அணை பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்தது.

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் மேட்டூா் அணை பூங்கா முக்கிய இடம் வகிக்கிறது. வார நாள்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்வா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்து சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5,128 ஆக குறைந்தது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவிற்கு 10,077 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் தொடங்குவதால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்தது.

மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரியில் நீராடி, அணை பூங்காவுக்குசென்று பொழுது போக்கினா். அணை பூங்காவிற்கு 5,128 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ன் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 25,640 வசூலானது. பவள விழா கோபுரத்தைப் பாா்வையிட 611சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா் இதன் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ.3,055 வசூலானது.

X
Dinamani
www.dinamani.com